ஒரே மருத்துவமனையில் அடுத்தடுத்து குழந்தை பெற்ற சகோதரிகள்: ஆச்சரியமடைந்த மருத்துவர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த சகோதரிகள் ஒரே நாளில் குழந்தை பெற்று அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த பெக்கி ப்ரீண்டிஸ் (25) மற்றும் சோஃபி ஃபுல்லர் (22) என்ற சகோதரிகள், தோழி ஒருவரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது கர்ப்பம் தரித்திருப்பது தெரியவந்தது.

இருவரும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளும் போது, டிசம்பர் 16 என குழந்தை பிறப்பதற்கான ஒரே திகதி இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் டிசம்பர் 23ம் திகதி 3.7 கிகி ஒலிவியா என்கிற குழந்தையும், 4.1கிகி ஆர்லோ என்கிற குழந்தையும் பிறந்தது.

இதனையடுத்து மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சோபியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழந்தை ஆர்லோவை கையில் தூக்கிக்கொண்டு, பெக்கி பிரசவ அறைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர்களுடைய அம்மாவை பார்த்த மருத்துவர், நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். இது என்னுடைய மற்றொரு மகள் எனக்கூறியதும் மருத்துவர் ஆச்சர்யமடைந்துள்ளார்.

ஆர்லோ மதியம் 12.37 மணிக்கு அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்தான். ஒலிவியா மாலை 4.56 மணிக்கு சுகப்பிரசவத்தில் பிறந்தாள்.

இந்த சம்பவம் தங்கள் இருவருக்குமே பெரும் ஆச்சர்யத்தை அளித்ததாக சகோதரிகள் கூறியுள்ளனர். மேலும் தங்களுடைய குழந்தைகள் சகோதரத்துவத்துடன் ஒரே நேரத்தில் வளர்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers