குழந்தை பெற்றெடுத்த பிரித்தானியாவின் முதல் ஆண்: தற்போது எப்படியுள்ளார் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் குழந்தையை பெற்றெடுத்த முதல் ஆணாக கருதப்படும் ஹைடன் கிராஸ் தனது மகளை ஊடகத்திடம் காட்டியதோடு அது குறித்து விரிவாக பேசியுள்ளார்.

ஹைடன் கிராஸ் என்பவர் பிறக்கும் போது பெண்ணாக பிறந்த நிலையில் பின்னர் ஆப்ரேஷன் மூலம் ஆணாக மாறினார்.

இதையடுத்து நபர் ஒருவரின் விந்தனுவை சுமந்து கர்ப்பமானார்.

இந்நிலையில் கடந்தாண்டு ஹைடனுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு டிரினிட்டி லீக் என பெயர் வைத்தார்.

இதன்மூலம் குழந்தையை பெற்றெடுத்த பிரித்தானியாவின் முதல் ஆண் என்ற பெயரை ஹைடன் பெற்றார்.

இந்நிலையில் தனது மகள் டிரினிட்டி லீக்-ஐ ஊடகத்திடம் காட்டி அது குறித்து பேசியுள்ளார் ஹைடன். அவர் கூறுகையில், என் போல குழந்தையை பெற்றெடுக்க மற்ற ஆண்களை நான் ஊக்குவிக்கமாட்டேன்.

காரணம் அது மிக கடினமான விடயமாகும், சரியான ஆதரவிருந்தால் மட்டும் இதை மேற்கொள்ளுங்கள். குழந்தை பிறந்த பிறகு பல சிக்கல்களை மேற்கொண்டேன், முக்கிய ஆப்ரேஷன்கள் எனக்கு நடந்தது.

விரைவில் இன்னொரு சர்ஜரி செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹைடன் கர்ப்பமாக இருந்தபோது அவரின் தாயும் அதே நேரத்தில் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ITV
ITV

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers