கேட் பிறந்தநாளில் அரண்மனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: குவியும் வாழ்த்துக்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி கேட் பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிரித்தனியா இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் தன்னுடைய 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

சிரித்த முகத்துடனே அவர் இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தை அரண்மனை நிர்வாகம் தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், இளவரசி கேட் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவிடப்பட்ட சில மணிநேரங்களில் அரண்மனை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டதுடன், அதற்கு கீழ் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒரு பயனாளர், "அழகான பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு வலுவான அம்மா மற்றும் #Mentalhealth பிரச்சினைகளுக்கு எதிரான போராட்டக்காரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.

இளவரசர் வில்லியம் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொள்ள இருப்பதால், கேட் அங்கு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...