ஹரி-மெர்க்கல் வாங்கியிருக்கும் ரகசிய பண்ணைவீடு இதுதானா? வெளியான பிரத்யேக புகைப்படம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினர் வாங்கியிருக்கும் ரகசிய பண்ணைவீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மெர்க்கலை கடந்த மே மாதம் திருமணம் செய்தது முதலே கென்சிங்டன் அரண்மனையில் தான் வசித்து வந்தார்.

வில்லியம் - கேட் தம்பதியினரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து, வின்ட்சரில் உள்ள ஃபிரோமோர் குடிசைக்கு குடியேற முடிவெடுத்தனர்.

தற்போது கர்ப்பிணியாக இருக்கும் மெர்க்கல், இளவரசர் ஹரியுடன் சேர்ந்து தன்னுடைய குழந்தையை அங்கு தான் வளர்க்க உள்ளாராம்.

இந்த நிலையில் தம்பதியினர் வாங்கியிருக்கும் ரகசிய பண்ணை வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆக்ஸ்போர்ட்ஷையர் பகுதியில் உள்ள பண்ணை வீடு மிகவும் அழகானதாக நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இங்கு ஊழியர்களுக்கு என தனியாக ஒரு குடிசை வீடு உள்ளது. £ 2.5 மில்லியனுக்கும் அதிகமான விலையில் வீடு வாங்கப்பட்டிருந்தாலும், பார்ப்பதற்கு எளிமையாக இரண்டு படுக்கையறைகளை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேகனின் தாய் டோரியா மற்றும் நண்பர்களான ஜார்ஜ், அமால் குளூனி மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் ஏற்கனவே இங்கு வருகை தந்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மேகனின் நண்பர் ஒருவர் வெளியிட்ட தகவலின் படி, பண்ணை வீடு மேகனுக்கு அதிக அளவில் பிடித்துள்ளதாகவும், அவர் நடைபயிற்சி மேற்கொள்வதோடு நாய்களுடன் வெளியில் செல்வதற்கும் இந்த இடம் உகந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...