ஸ்தம்பித்த ஹீத்ரோ விமான நிலையம்... திடீரென்று குவிக்கப்பட்ட ராணுவம்: பயணிகள் கூச்சல் குழப்பம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தின் வான் எல்லையில் மீண்டும் ட்ரோன்கள் நடமாட்டம் தென்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் விமான சேவை ஸ்தம்பித்தது.

குறித்த விவகாரத்தை அடுத்து ஹீத்ரோ விமான நிலைய நிர்வாகம் ராணுவத்தை உதவியை நாடியுள்ளது.

விமான சேவை சுமார் ஒரு மணி நேரம் ஸ்தம்பித்ததால் பயணிகள் கூச்சல் குழப்பதில் ஈடுபட்டுள்ளனர். மட்டுமின்றி விமான ஓடுதளத்திலேயெ சிக்கித் தவிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஹீத்ரோ விமான நிலையத்தில் குவிக்கப்பட்ட ராணுவத்தினர், ட்ரோன்கள் தொடர்பில் தேவை ஏற்படும் எனில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயார் எனவும் அறிவித்துள்ளனர்.

விமான நிலையத்தின் வான் எல்லையில் ட்ரோன்களின் நடமாட்டத்தை பெருநகர பொலிசாரும் நேரிடையாக பார்த்துள்ளனர்.

கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக Gatwick பகுதியில் ட்ரோன்களின் நடமாட்டம் இருந்ததால் சுமார் 1000 விமானங்கள் மொத்தமாக பாதிக்கப்பட்டது.

3 நாட்கள் தொடர்ந்த இப்பரிச்னைக்கு பின்னர் சில விமான சேவைகள் மீட்கப்பட்டது என்றபோதும் பல விமானங்கள் ஓடுதளத்திலேயே ஸ்தம்பித்தது.

தினசரி 200,000 பயணிகளுக்கு சேவை புரியும் மிகவும் பரபரப்பான அந்த விமான நிலையம் ஸ்தம்பித்தது உலகமெங்கும் விவாதிக்கப்பட்டது.

தற்போது ஹீத்ரோ விமான நிலையத்தில் ட்ரோன்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிப்படியாக விமான சேவையை துவக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வான் எல்லையில் சட்டவிரோதமாக ட்ரோன்களை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான செயல் என கூறும் அதிகாரிகள்,

எவரேனும் இந்த விவகாரம் தொடர்பில் சிக்கினார்கள் என்றால் கண்டிப்பாக ஆயுள் தண்டனையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers