மீண்டும் சின்னத்திரையில் இளவரசி மேகன்?: பல மில்லியன் பவுண்டுகள் வழங்க முன்வந்துள்ள தொலைக்காட்சி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

முன்னாள் அமெரிக்க நடிகையாயிருந்து பிரித்தானிய இளவரசியாகிவிட்ட மேகன் மெர்க்கலை மீண்டும் நடிக்க வைக்க தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று முயற்சி செய்து வருவதால், மீண்டும் மேகனை சின்னத்திரையில் பார்க்க முடியுமா என்னும் எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தற்போது இளவரசியாகியிருக்கும் மேகன், இளவரசர் ஹரியை மணக்கும் முன் நடித்த பிரபல தொலைக்காட்சித் தொடர் Suits.

அரை நாள் அல்லது அதற்கு குறைவாக கால்ஷீட் கொடுத்தால் கூட போதும், நாங்கள் மேகன் தொடர்பான அந்த காட்சியை எடுத்து முடித்து விடுவோம் என்கின்றனர் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

அதற்காக அந்த நிறுவனம், இரண்டு முதல் ஆறு மில்லியன் பவுண்டுகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2010 முதல் Suits தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்த மேகன், இளவரசர் ஹரியை மணப்பதற்காகவும், தனது தொண்டு நிறுவனங்களில் கவனம் செலுத்துவதற்காகவும் நடிப்பதை நிறுத்த முடிவு செய்தார்.

எனவே அந்த தொடர், மேகன் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்கையை தொடங்குவதாக முடிந்திருந்தது.

தற்போது மீண்டும் அந்த தொடரில் இன்னொரு எபிசோடை எடுக்க விரும்பும் அந்த தொலைக்காட்சி நிறுவனம், மேகன் கர்ப்பமுற்றிருப்பதாகவும், தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் காட்ட விரும்புகிறது.

இதனால் தங்கள் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அந்த நிறுவனம் நம்புகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers