லண்டனில் பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மூவர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் கிழக்கு லண்டன் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை பகல் நடந்த இச்சம்பவத்தை அடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தாக்குதலுக்கு இரையான பெண்ணிற்கு 30 வயது இருக்கலாம் எனவும், அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எஞ்சிய இருவரும் ஆண்கள் எனவும், அவர்களும் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த சர்ச் சாலை பகுதியில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் 33 வயதான சார்லோட் ஹாகின்ஸ் என்பவரே லண்டனில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இரையான முதல் நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் 34 வயதான Michael Rolle என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதான இன்னொரு நபரை விசாரணைக்கு பின்னர் பொலிசார் விடுவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers