யாரும் என் மகளை விமர்சிக்காதீர்கள்: கேட்- மெர்க்கல் விவகாரம் குறித்து உருக்கமாக பேசிய தந்தை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அரச குடும்பத்தில் நிலவி வரும் சர்ச்சை விடயங்களால் மேகன் பெறுகிற விமர்சனம் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தாமஸ் மெர்க்கல் கூறியுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரியை கடந்த மே மாதம் திருமணம் செய்தது முதலே, தன்னுடைய தந்தை தாமஸ் (74) உடனான பேச்சு வார்த்தையை மெர்க்கல் நிறுத்தி கொண்டார்.

இதுதொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தாமஸ், ஹரி- மெர்க்கல் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதன் விளைவாக இணையதளத்தில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டதோடு, மகளுடனான எதிர்ப்பினை சம்பாதிக்க ஆரம்பித்தார்.

அன்று முதல் இன்று வரை ஹரி - மெர்க்கல் இருவருமே தாமஸிடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். பல முறை போன் செய்தும் கூட மகளிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால் தாமஸ் பெரும் கலக்கத்திற்கு உள்ளானார்.

இந்த நிலையில் இன்று தனியார் இதழுக்கு பேட்டியளித்துள்ள தாமஸ், மெர்க்கல் பேசாமல் இருப்பது ஒரு கனவு போன்றது, அது தற்போது ஒரு கனவுலகமாக மாறிவிட்டது, இளவரசரும் மேகனும் எனக்கு ஒரு அழைப்பு கொடுப்பதன் மூலம் இந்த கனவு முடிவுக்கு உதவலாம்.

இந்த நாள் வரை நான் எதைப்பற்றியும் நினைக்கவில்லை, நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதை தற்போது புரிந்து கொண்டேன்.

நான் ஒரு நல்ல தந்தை, எந்த தவறும் செய்ததில்லை, கோடரியின் மூலம் 19 கொலைகளை செய்தவரை கூட அவருடைய குழந்தைகள் இன்றும் சிறைக்கு சென்று சந்தித்து வருகின்றனர். மேகன் என்னை இந்த வழியில் நடத்துவதற்கான காரணம் எனக்கு புரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

பின்னர் கேட்- மெர்க்கல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக இணையதளத்தில் பரவி வரும் செய்தி குறித்து பேசிய அவர், மேகன் மற்றும் கேட் இடையே ஏதாவது விரோதம் இருந்தால், அவர்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி விட வேண்டும், மேகன் பெறுகிற விமர்சனத்தால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

மேகனால், கேட் அழுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, கேட் மிகவும் துணிச்சலான ஒரு பெண், மேகனை விட சக்தி வாய்ந்த பதவியில் இருப்பதை கேட் அறிவார் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers