ஓடும் ரயிலில் மகனின் கண்முன்னே தந்தையை குத்தி கொலை செய்த பெண்: அதிரடி காட்டிய பொலிஸார்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஓடும் ரயிலில் மகனின் கண்முன்னே தந்தையை குத்தி கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லண்டனில் கில்ட்போர்ட் பகுதியில் இருந்து வாட்டர்லூ செல்லும் ரயிலில் நேற்று மதியம் 12.58 மணிக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.

14 வயது மகனின் கண்முன்னே 51 வயது தந்தையை குத்தி கொலை செய்துவிட்டு, மர்ம நபர் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட ரயில்வே பொலிஸார் இன்று அதிகாலை 6 மணிக்கு சர்தி நகரில் ஃபர்ன்ஹம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள பிரித்தானிய போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி டி.சி.ஐ. சாம் பிளாக்பர்ன், நேற்று மதியம் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக எங்களுடைய பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் விரைந்து செயல்பட்டனர்.

இன்று அதிகாலை நடைபெற்ற இந்த கைது நடவடிக்கையானது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதுதொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது .

கத்திக்குத்து நடைபெறுவதற்கு முன்பு, கொலை செய்யப்பட்டவருக்கும், கைது செய்யப்பட்டிருக்கும் பெண்ணுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் பலரும், ரயில்வே பொலிசாரின் செயலை பாராட்டி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers