இலங்கை தமிழ் வம்சாவளியினர் கொலை வழக்கு: ரகசிய காதலியின் தம்பி சிறை செல்வாரா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இலங்கை தமிழ் வம்சாவளியினரான ஒரு இளைஞர் தனது ரகசிய காதலியின் வீட்டிலிருக்கும்போது அந்த பெண்ணின் தம்பி அவரை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் அவன் சிறைக்கு செல்வானா என்பது இன்னும் முடிவாகவில்லை.

பிரித்தானியாவின் Watfordஇல் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் பிள்ளைகள் மீது மிகவும் கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில், வீட்டுக்கு நண்பர்களை அழைத்து வருவதற்கும் பிள்ளைகளுக்கு அனுமதியளித்திருக்கவில்லை.

இந்நிலையில் வெளிநாடு செல்ல வேண்டி வந்ததால் தங்கள் உறவினர்களிடம் பிள்ளைகளை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளுமாறு கூறியிருந்தனர்.

அந்த குடும்பத்தின் மூத்த பெண்ணான 19 வயது இளம்பெண்ணுக்கு இலங்கை தமிழ் வம்சாவளியினரான Risaan Udayakumar (18) என்னும் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு நாள் வீட்டில் தனது தம்பி இல்லாத நேரத்தில் தனது ரகசிய காதலனான Risaanஐ வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள் அந்த பெண்.

அரை மணி நேரம் அவர்கள் படுக்கையறையில் சேர்ந்து இருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவே, பயந்துபோன அந்த பெண், Risaanஐ வீட்டின் பின்னால் ஒளித்து வைத்துவிட்டு கதவைத் திறந்திருக்கிறாள்.

ஏற்கனவே தனது அக்காவுக்கும் Risaanக்கும் தொடர்பு இருக்கலாம் என்னும் சந்தேகத்திலிருந்த 16 வயதுள்ள அவளது தம்பி, படுக்கையறைக்குள் வந்து யாராவது இருக்கிறார்களா என்று தேடியிருக்கிறான்.

அங்கு யாரும் இல்லை என்றதும், வீடு முழுவதிலும், வீட்டிற்கு வெளியேயும் தேடிய அவன், வீட்டின் பின்னால் ஒளிந்திருந்த Risaanஐக் கண்டதும், ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியிருக்கிறான்.

Risaan அலறிய சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த வழிப்போக்கர் ஒருவர் அவசர உதவி எண்ணை அழைக்க, பொலிசாரும் மருத்துவ உதவிக் குழுவினரும் விரைந்து வந்துள்ளனர். பொலிசார் கத்தியால் குத்திய நபரைக் கைது செய்ய, கத்தியால் குத்தப்பட்ட Risaan மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட Risaan சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

பொலிஸ் விசாரணையில் தான் Risaanஐ தாக்கியது உண்மைதான் என்றும் ஆனால் கொலை செய்யவில்லை என்றும் அந்த பெண்ணின் தம்பி கூறியிருக்கிறான்.

இன்றும் வழக்கு தொடரும் நிலையில், அவன் சிறைக்கு செல்வானா என்பது இன்னமும் முடிவாகவில்லை.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers