பிரித்தானிய மகாராணிக்கு பாஸ்போர்ட் கிடையாது!

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

1952 ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியாக முடிசூடிக்கொண்டார் எலிசபெத் அவர்கள்.

ஐக்கிய சாம்ராஜ்யம் கனடா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உட்பட 16 இறையாமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாகவும் 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவராவார்.

பிரித்தானிய வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்துகொண்டிருக்கும் பெருமை இவரையே சாரும்.

பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும்போது அவருக்கு பாஸ்போர்ட் கிடையாது.

நாட்டின் குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்க அனுமதி வழங்கும் அரசிக்கு பாஸ்போர்ட் தேவையே இல்லை. இருப்பினும், ரகசிய ஆவணங்கள் தேவைப்படுகிறது.

மகாராணியின் தூதுவர்கள் உலகம் முழுவதும் இந்த ரகசிய ஆவணத்தை கொண்டு சேர்க்கும் பணியைச் செய்வார்கள். இந்த ஆவணங்கள் பாஸ்போர்ட் போல செயல்படும்.

இது போன்ற பாஸ்போர்ட்களில் 15 மட்டுமே உள்ளன என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers