ஓடும் ரயிலில் மகன் கண் முன்னே வாள்வெட்டுக்கு பலியான தந்தை: பொதுமக்களை எச்சரித்த பொலிஸ்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஓடும் ரயிலில் மகன் கணெ எதிரே நபர் ஒருவர் வாள்வெட்டுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் சம்பவப்பகுதியில் இருந்து மாயமானதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கில்ட்ஃபோர்ட் பகுதியில் இருந்து வாட்டர்லூ செல்லும் 12:58 மணி ரயில் சேவையிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

14 வயது மகனுடன் பயணமான 51 வயதான அந்த நபர் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடாத பொலிசார், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட நபர், கழுத்து முகம் என உடம்பின் பல இடங்களில் கத்தியால் தாக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

6 அடி உயரமும், தாடி வைத்துள்ளவரும், கருப்பு உடை அணிந்தவருமான அந்த மர்ம நபர் தற்போது வரை தலைமறைவாக உள்ளதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers