பிரித்தானியாவில் 42 வயதில் 21 குழந்தைகள்! முதல் கர்ப்பமான வயதைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 42 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்த பெண், தன்னுடைய 13 வயதில் முதல் முறையாக கர்ப்பமாகியுள்ளார் என்பது தெரியவந்தவுடன் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் வசித்து வரும் தம்பதி Sue Radford-Noel. இதில் Sue Radford தன்னுடைய 42 வயதில் 21-வது குழந்தையை பெற்றெடுத்தார்.

இதனால் பிரித்தானியாவின் மிகப் பெரிய குடும்பமாக Sue Radford-Noel குடும்பம் காணப்பட்டது. 21 குழந்தைக்கு பின் இனிமேல் குழந்தை பெற்றெடுக்கப் போவதில்லை எனவும் குடும்பக்கட்டுபாடு அறுவைசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் Sue Radford தெரிவித்தார்.

இவர்களின் இந்த வாழ்க்கை குறித்து பிரபல ஆங்கில ஊடகம் பேட்டி எடுத்துள்ளது. அப்போது பெரும்பாலான பார்வையாளர்களின் கேள்வி, இவர் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார், இவரின் முதலில் கர்ப்பமானது எந்த வயது என்று கேட்டனர்.

அப்போது Sue Radford தன்னுடைய 13 வயது முதல் முறையாக கர்ப்பமடைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு 13 வயது இருக்கும் போது Noel-க்கு 18 வயது இருந்துள்ளது. இதைக் கேட்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதை அறிந்த பெரும்பாலானோர், இது ஒரு குற்றம் 13 வயதில் கர்ப்பம் என்பது மன்னிக்க முடியாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடைசி கிறிஸ்துமஸ்க்கு Noel தன்னுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் 100 பவுண்ட் முதல் 250 பவுண்ட் வரை செலவு செய்துள்ளார். இப்படி அவர் குழந்தைகளுக்கு மட்டும் மொத்தமாக 5,250 பவுண்ட் செலவு செய்துள்ளதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers