'அல்லாஹ்' என கூச்சலிட்டவரே ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர்: 3 பேர் காயம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தின் மான்செஸ்டர் விக்டோரியா நிலையத்தில் நடந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் விக்டோரியா நிலையத்தில் இன்று இரவு 8.50 மணிக்கு(உள்ளுர் நேரப்படி) மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட ஒரு ஆணும், பெண்ணும் காயமடைந்துள்ளனர். தற்போது மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், அந்த மர்ம நபர் கையில் 12 அங்குலம் கொண்ட நீளமான கத்தியினை வைத்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு முன்பு அவர், "அல்லாஹ்" என கூச்சலிட்டார்.

முதலில் ஒரு பொலிஸார் அவரை தடுத்த நிறுத்த முற்பட்டபோது, கத்தியால் தாக்குதலுக்கு உள்ளானார். உடனே மற்றொரு பொலிஸார் முகத்தில் மிளகு ஸ்ப்ரே அடித்து லாவகமாக பிடித்தார் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்