பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஒரு கப் தேநீர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர், புற்றுநோயிலிருந்து தன்னுடைய உயிரை காப்பாற்றியது தேநீர் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த 54 வயதான நிக்கோலா ஃபேர்பிரேஸ் புற்றுநோயிலிருந்து தான் மீண்டு வந்ததை பற்றி தனியார் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், எனக்கு தேநீர் என்றால் மிகவும் பிடிக்கும். நான் உறங்கும் மெத்தைக்கு அருகில் எப்பொழுதும் ஒரு தேநீர் வைக்கப்பட்டிருக்கும்.

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னுடைய இடது மார்பகத்தில் ஒரு கட்டி இருப்பதை கண்டறிந்தேன். ஆரம்பத்தில், அது ஒரு நீர்க்கட்டி அல்லது வேறாக இருக்கலாம் என நினைத்து விட்டுவிட்டேன்.

பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து பார்த்தபோது, கட்டி பெரிதாகியிருந்தது. உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டபோது, புற்றுநோய் வந்திருப்பதாகவும், அது தற்போது மூன்றாவது நிலையை அடைந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய் பரவாமல் இருக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடந்து 6 மாதங்கல் 8 சுற்றுகளாக கடுமையான கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சமயம் தான் படுக்கையில் இருந்த நான், தினமும் குறைந்தபட்சம் 5 முறை தேநீர் அருந்த ஆரம்பித்தேன்.

இதன் பலனாக மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளும்போது, கட்டியில் அளவு 43 மில்லிமீட்டரில் இருந்து 17 மில்லிமீட்டர் வரை அளவு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்.

பின் செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புற்றுநோய் குறைந்துவிட்டதாகவும், ஆனால் தொடர்ந்து 5 முதல் 10 வருடங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்.

இது என்னுடைய மகள் கேப்ரியல் [19] மற்றும் கணவர் பால் (50) ஆதரவு இல்லாமல் நடந்திருக்காது. என்னுடைய மகள் தான் எனக்கு பெரும் ஆதரவு கொடுத்து தேற்றினாள் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers