2018ஆம் ஆண்டில் அரச அலுவல் பணிகளில் ஈடுபட்ட பிரித்தானிய றொயல் குடும்பத்தினர் விபரம்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்பத்தினர் 2018ஆம் ஆண்டில் அரசு சார்ந்த அலுவல் பணிகளில் ஈடுபட்டது குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், பிரித்தானிய அரச குடும்பத்தினர் அரசு அலுவல் பணிகளில் கலந்துகொண்டது குறித்த விபரம் வெளியிடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விபரம் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், 507 அலுவல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது அவரது மகன் இளவரசர் வில்லியமை விட அதிகம் ஆகும்.

மேலும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி அன்னே தான் மற்றவர்களை விட அதிக அரசு அலுவல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவர் 518 அலுவல் பணிகளில் கலந்துகொண்டார்.

அவருக்கு அடுத்தபடியாக இளவரசர் எட்வர்டு(463), இளவரசர் ஆண்ட்ரூ(394), எட்வர்டு மனைவி சோஃபி(239), இளவரசர் வில்லியம்(220), சார்லஸ் மனைவி கமில்லா(219), இளவரசர் ஹரி(193) ஆகியோர் உள்ளனர்.

அரச குடும்ப மருமகள்கள் கேத்ரின் 87 அரச நிகழ்ச்சிகளிலும், மேகன் மெர்க்கல் 96 அரச நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். தனது 92வது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடிய மகாராணி எலிசபெத், 283 அரச அலுவல் பணிகளில் கலந்து கொண்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்