கோரமான நபரை திருமணம் செய்யும் அழகிய இளம்பெண்.. அந்த நாளுக்கு காத்திருக்கிறேன் என உருக்கம்

Report Print Raju Raju in பிரித்தானியா

ஆசிட் வீச்சில் கண்களை இழந்த நபர் தான் வாழ்க்கையில் மீண்டு வர உதவிய செவிலியரை திருமணம் செய்யவுள்ளார்.

டேனியல் ரோடாரு (33) என்பவர் பிரித்தானியாவின் Leicester நகரில் வசித்த போது அவரின் முன்னாள் காதலி கேட்டி லியோங் என்பவர் டேனியல் மீது ஆசிட் வீசினார்.

இந்த சம்பவம் கடந்த 2016 ஜூலையில் நடந்த நிலையில் டேனியலின் உருவம் முழுவதும் உருக்குலைந்தது.

இதுவரை அவருக்கு 20 ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே வலது கண்பார்வையை இழந்துவிட்ட டேனியல், இடது கண் பார்வையையும் முக்கால்வாசி இழந்துவிட்டார்.

இடைப்பட்ட காலத்தில் டேனியல் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் இருந்த செவிலியர் அன்னா கேடங்காவுக்கும், அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் மே மாதம் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர்.

இது குறித்து டேனியல் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் வாழ்க்கையே மாறி போனது. அதில் ஒரு திருப்புமுனையை அன்னா ஏற்படுத்தினார்.

என் முன்னாள் காதலி கேட்டி என் வாழ்க்கையில் ஏற்படுத்திய மோசமான தாக்குதலை என்னால் மறக்க முடியாது. தற்போது அன்னாவை திருமணம் செய்யப்போகும் நாளுக்காக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் டேனியல் மீது ஆசிட் வீசிய கேட்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை அவர் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்