லண்டனில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெண்: அச்சம் தெரிவித்த உளவுத்துறை அதிகாரிகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

400 பேரின் மரணத்திற்கு காரணமான பெண், ஏமனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக பிரித்தானிய உளவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரித்தானிய ராணுவ வீரரின் மகளும், 7/7 வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவரின் மனைவியுமான 35 வயது சமந்தா லெவ்த்வாட், உலகம் முழுவதும் தேடப்படும் குற்றவாளிகளுள் ஒருவர்.

இவருடைய குழந்தைகள் மூன்று பேருமே, வெவ்வேறு மூன்று ஜிகாதிகளுக்கு பிறந்தவர்கள்.

கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள், சமந்தாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் தற்போது, தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு ஏமனில் தலைமறைவாக இருப்பதாக உளவுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர் லண்டனில் பல இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தலாம் என அச்சம் தெரிவித்துள்ளன.

அதேசமயம், சமந்தாவை தாங்கள் நெருங்கிவிட்டதாகவும் விரைவில் கைது செய்துவிடுவோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடைய கணவர் 2006ம் ஆண்டு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். கென்யாவில் 2013 ஆம் ஆண்டு வெஸ்ட்கேட் மால்தாக்குதலில் சமந்தாவிற்கு தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட பின்னர் Interpol அதிகாரிகள் கைது செய்வதற்கான ரெட் அறிவிப்பினை வெளியிட்டனர்.

இந்த தாக்குதலில் 6 பிரித்தானியர்கள் உட்பட 66 பேர் பலியாகினர். மேலும், 200 பேர் படுகாயமடைந்தனர்.

2015 இல் ஒரு பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 148 பேர் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாகவும் சமந்தா விளங்கியுள்ளார்.

இவர் தற்கொலை செய்துகொள்வதற்காக 30 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் எனவும், அதற்கான இடங்களை தற்போது தேர்வு செய்து வருவதாவும் அஞ்சப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...