மேடையில் வைத்தே பிரபல பாடகரை சரமாரியாக தாக்கிய ரசிகர்: வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரை திடீரென ரசிகர் ஒருவர் பாய்ந்து சென்று தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் உள்ள விடுதியில், பாடகர் ஜே முர்ரே 'ஸ்வீட் கரோலின்' பாடலை பாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நடமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென மேடையில் சென்று, அப்படியே முர்ரேவின் கால்களை பிடித்து கீழே தள்ளிவிட்டார்.

பின் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த தப்பி ஓடிவிட்டார்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து, முர்ரேவின் நண்பர்கள் பலரும் பகிர ஆரம்பித்து தங்களுடைய ஆதரவையும் தெரிவித்தனர்

இதுகுறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாடகர் ஜே முர்ரே, அந்த நபர் ஒரு குழந்தையை போல என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். உங்கள் அனைவரின் ஆதரவு வார்த்தைகளுக்கும் நன்றி என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விடுதி நிர்வாகம், எங்களுடைய 28 வருட அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது இல்லை. அதிர்ஷ்டவசமாக பாடகருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்