பிரித்தானியாவில் இளம்பெண்கள் கொல்லப்பட்ட வழக்கு: புதிய அறிக்கையால் அதிர்ச்சியடைந்த பொலிஸார்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒரு சிறுமி உட்பட 4 இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றவாளி, குழந்தைகள் பாலியல் வழக்கிலும் சம்மந்தப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளி லெவி பெல்பீல்ட், குறித்த அறிக்கை சமீபத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது யூசுஃப் ரஹிம் என அழைக்கப்படும் பெல்பீல்ட், 2002ம் ஆண்டு மில்லி டவ்லர் (13), அமீலி டெலாக்ரேஜ் (22), மார்ஷா மெக்டோனல் (19) ஆகியோரை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்தார்.

அதனை தொடர்ந்து கேட் ஷீடி என்ற 18 வயது இளம்பெண்ணை கொலை செய்ய முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி, 2008ம் ஆண்டு குற்றவாளிக்கு இரட்டை வாழ்நாள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார். மேலும், குற்றவாளி குறித்த அறிக்கையினை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி வெஸ்ட் லண்டனில் உள்ள ஹில்டிங்டன் கவுன்சிலின் முன்னாள் குழந்தை பாலியல் சுரண்டல் மேலாளர் Weissang, பெல்பீல்ட் தங்கியிருந்த பகுதியில் தீவிரமான ஆய்வு மேற்கொண்டு 2017ம் ஆண்டு முதல் அறிக்கையினை எழுத ஆரம்பித்தார்.

அந்த அறிக்கையினை தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அவர், குற்றவாளி பெல்பீல்ட்ற்கு, குழந்தை பாலியல் குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இவர் 6 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து செயல்பட்டதாகவும், 16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை கடத்தி வீட்டில் "பாலியல் அறை" எனப்படும் ஓரு அறையில் வைத்து துஸ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சிறுமிகளுக்கு வலுக்கட்டாயமாக ஊக்க மருந்து கொடுத்து தான் அவர்கள் இதனை செய்து வந்துள்ளனர்.

அவர்களில் பலரும் தற்போது வெளியில் சுற்றித்திரிவதால் பிரித்தானியாவில் வாழும் குழந்தைகளுக்கு ஒரு வித அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னே பெல்பீல்ட் பல பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2005ம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு ஊக்க மருந்து கொடுத்து கைது செய்யப்பட்ட விக்டர் கெல்லி மற்றும் 14 வயது சிறுமியுடன் படுக்கையில் இருந்ததற்காக 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சூரஜ் கருவின் பெயர்களையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், Hillingdon கவுன்சில் செய்தித் தொடர்பாளர் இதற்காக தனி பொலிஸார் படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்