உடைந்த பாட்டில் நெஞ்சில் குத்தியபடி ரத்தம் வழிய கடைக்குள் நுழைந்த நபர்: அலறிய வாடிக்கையாளர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்காட்லாந்தில் உடைந்த பாட்டில் நெஞ்சில் குத்தியபடி ரத்தம் வழிய கடைக்குள் நுழைந்த நபரை பார்த்து வாடிக்கையாளர்கள் பயந்து ஓடியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

ஸ்காட்லாந்து பகுதியில் செயல்பட்டு வரும் கடை ஒன்றில் மர்ம நபர் ஒருவர் ரத்தம் வழிய, நெஞ்சு பகுதியில் உடைந்த கண்ணாடி பாட்டில் சொருகியபடியே நுழைந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், 28ம் தேதி இரவு 8 மணிக்கு Inverurie பகுதியில் செயல்பட்டு வரும் கடை ஒன்றில் ஒரு நபர் ரத்தத்துடன் நுழைந்திருப்பதாகவும், அவரை பார்த்து வாடிக்கையாளர்கள் பயந்து ஓடுவதாகவும் புகார் வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 36 வயதுள்ள நபர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers