பிரித்தானியாவில் அப்பளமாக நொறுங்கிய மினி பேருந்து: ஒருவர் பலி... 23 பேர் படுகாயம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்காட்லாந்து எல்லை பகுதியில் மினி பேருந்து கவிந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியானதோடு, 23 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மினி பேருந்து ஒன்று நியூட்ரோகிரேஞ்ச்லிருந்து கெல்ஸோ நோக்கி 23 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.

ஏடின்பர்க்கீழ் இருந்து 23 கிமீ தொலைவில் லாடர் அருகே Carfraemill மற்றும் கார்டன் இடையே சென்று கொண்டிருக்கும்போது காலை 10.50 மணிக்கு திடீரென கட்டுப்பாட்டை இழந்து, மினி பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் உட்பட 22 பேரை மீட்டு எடின்பர்க் ராயல் மருத்துவமனை மற்றும் ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், மீட்பு பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்