கார் விபத்தில் சிக்கிய தாய்...கொலை செய்யப்பட்ட இரட்டை குழந்தைகள்: அதிர்ச்சியடைந்த பொலிஸார்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் வேண்டுமென்றே கார் விபத்தில் சிக்கி காயமடைந்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் Whitstable பகுதியில் நேற்று லொறியின் பின்பக்கம் கார் ஒன்று வேகமாக மோதி விபத்தில் சிக்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, சமந்தா ஃபோர்ட் என்ற 37 வயதான வேண்டுமென்றே ஏற்படுத்தியிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பொலிஸார், சமந்தா கொடுத்த வீட்டு முகவரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு இரண்டு குழந்தைகள் சுயநினைவிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவர்களுடைய தாய் சமந்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய சமந்தாவின் பாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் என்னுடைய பேத்தி கணவரை விட்டு பிரிந்தாள். இருவருக்குள்ளும் நடந்தவை குறித்து எனக்கு தெரியாது. ஆனால் அந்த குழந்தைகள் இன்னும் 2 வயதை கூட கடக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers