மூன்று குழந்தைகளை புதைத்த பெற்றோர்: நான்காவது குழந்தைக்கு நேர்ந்த கதி.. கண்ணீர் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் வினோத நோயால் மூன்று குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் நான்காம் குழந்தையையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அடிலீ - கிரைக் தம்பதிகள் மிகவும் சோகமான மற்றும் மன உளைச்சலான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் உள்ளது, இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். நால்வருக்குமே Leigh's syndrome என்னும் மூளையை தாக்கும் மரபணு நோய் இருந்துள்ளது.

இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் வயதை விட மூளையின் செயல்பாடு மிக குறைவானதாகவே இருக்கும். இந்த நோய்க்கு இன்னும் மருந்துகள் ஏதும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

இப்படி தான் அடீலி - கிரைக் தம்பதியின் முதல் குழந்தை ஏஞ்சல் கடந்த 2011-ல் இறந்தது.

இதன்பின்னர் இரண்டாவது மகன் ஏஜே கடந்த 2014ல் உயிரிழந்தான்.

மூன்று மாதம் கழித்து மூன்றாவது மகள் ஜாஸ்மின் தனது 9வயது வயதில் உயிரிழந்தாள்.

தங்களது மூன்று குழந்தைகளையும் அடீலியும் - கிரைக்கும் கனத்த மனதோடு புதைத்தனர்.

இந்நிலையில் தம்பதியின் நான்காவது மகள் ஜேட் லேக் (8)க்கும் இதே நோய் வந்துள்ளது.

அவரையும் காப்பாற்ற முடியாது என்பதால் இது தான் ஜேட் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் என்ற சோகமான மனநிலையில் அவர் பெற்றோர் உள்ளனர்.

இது குறித்து கிரைக் கூறுகையில், நாளை என்ன நடக்கும் என்பதை நம்மால் கூறமுடியாது. வாழ்க்கை மிகவும் சிறியது. என் மகள் ஜேட்டின் உடல் நிலை மிகவும் பலவீனமாகி வருகிறது.

பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை வருவதால் கருக்கலைப்பு செய்யலாமே என என் மனைவியுடம் சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் அதில் எங்களுக்கு உடன்பாடில்லை, நடப்பது நடக்கட்டும் என சோகத்துடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்