கனிவுடன் பார்த்த மேகன், கண்டுகொள்ளாத வில்லியம்: உண்மையில் சண்டை யாருக்குள்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசிகள் கேட்டுக்கும் மேகனுக்கும் சண்டை என்றும் வில்லியமுக்கும் ஹரிக்கும் உரசல் என்றும் செய்திகள் வெளியாகி, பின்னர் மகாராணியார் தலையிட்டதாகவும்,

அதன்பின்னரே சகோதரர்கள் இருவரும் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவெடுத்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றை சுட்டிக்காட்டும் பிரித்தானிய பத்திரிகைகள் மேகனுக்கும் வில்லியமுக்கும்தான் ஏதோ பிரச்சினை என்கின்றனர்.

வெளியானவை வதந்திகளோ என அனைவரும் எண்ணும் வகையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இளவரசர் வில்லியமும் ஹரியும் தத்தம் மனைவியருடன் இணைந்து நடைபயில, ஒரு குறிப்பிட்ட நிகழ்வை கவனிக்க பத்திரிகையாளர்கள் தவறவில்லை.

வெளியான வீடியோ ஒன்றில், Sandringhamஇலுள்ள புனித மேரி மகதலேனா ஆலயத்திலிருந்து தம்பதிகள் புறப்படும் நேரத்தில், மேகன் வில்லியமிடம் ஏதோ பேச முயல்கிறார்.

ஆனால் மேகனை தவிர்க்கும் வில்லியம் தன்னுடைய கழுத்தில் அணிந்துள்ள ஸ்கார்ஃபில் தனது கவனத்தை செலுத்துகிறார்.

உடனே மேகனும் அதை அலட்சியப்படுத்தி நடையைக் கட்டுவதோடு பின்னர் தன் அருகில் வரும் கேட்டிடம் பேச்சுக் கொடுக்கிறார்.

இது கர்ப்பமாக இருக்கும் தன் தம்பி மனைவியை வில்லியம் அவமதிப்பதை உறுதி செய்வதாக வீடியோவைப் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கேட்டும் மேகனும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் பொதுமக்கள் கண்களுக்கு தெரியாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என ராணியார் அறிவுறுத்தியிருக்க, அவர்களும் அவரது சொற்படி புன்னகையுடன் வலம் வந்த வேளையில் வில்லியம் இப்போது சிக்கியிருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...