பிரித்தானியாவில் பலர் கண் முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்! வெளியான பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அடையாளம் தெரியாத நபர் மீது கார் ஒன்று திடீரென்று வந்து அடுத்தடுத்து தொடர்ந்து மோதியதால், அந்த நபரின் இரண்டு கால்களும் உடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் Birkby பகுதியில் இருக்கும் Bradford சாலையிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் பெயர் தெரியாத நபர் ஏதோ பேசிக் கொண்டு, வரும் போது திடீரென்று ஒரு சிவப்பு நிற பிஎம்டபில்யூ கார் அந்த நபர் மீது மோதுகிறது.

இதனால் அந்த நபர் தூக்கி வீசப்படுகிறார். இதைக் கண்ட அருகில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்ற முயன்ற போது, மீண்டும் அந்த கார் வந்து அவர் மீது மோதுகிறது.

இதையடுத்து கார் மீது ஒரு நபர் தாக்குகிறார். ஆனால் கார் ஓட்டிய நபர் பொலிசார் வருவதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் அந்த நபரின் இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்துள்ளதாகவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்துமில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.

அந்த காரை ஒட்டி வந்த நபருக்கு வயது 20 முதல் 30-லிருந்து இருக்கும் எனவும், அவர் ஒரு ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர் போன்று இருந்ததாகவும், எதற்காக இப்படி அந்த நபர் செய்தார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்ததால், அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...