பிரித்தானியா இளவரசிகள் மெர்க்கல்-கேட் மிடில்டனுக்கும் சண்டையா? கிறிஸ்துமஸ் தினத்தில் முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளவரசி கேட் மிடில்டன் மற்றும் மேகன் மெர்க்கலுக்கிடையே பிளவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகிருந்த நிலையில், இன்று கிறிஸ்துமஸ் தினத்திற்கு இருவரும் மகிழ்ச்சியாக வந்துள்ளது, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பிரித்தானியாவில் இந்த ஆண்டு மே மாதம் இளவரசர் ஹரி-மெர்க்கலுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திடீரென்று இளவரசர் வில்லியம் உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஹரி - மெர்க்கல் தம்பதியினர் அரண்மனையை விட்டு விரைவில் வெளியேற உள்ளதாகவும் அவர்கள் கென்சிங்டன் அரண்மனையிலிருந்து வெளியேறி தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பிரோமோர் ஹவுஸிற்கு செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

அதுமட்டுமின்றி இந்த பிரச்சனையால் இளவரசி மேகன் மெர்க்கல்-கேட் மிடில்டனுக்கிடைய பிளவு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதைப் பற்றி எந்த ஒரு உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இன்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால், அரசகுடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் தேவாலயத்திற்கு வருவர், அப்போது உண்மை நிலவரம் என்ன என்பது தெரிந்துவிடும் என்பதற்காக ஊடகங்கள் அரசகுடும்பத்தின் வருகைக்காக காத்திருந்தனர்.

அதன் படி Sandringham-ல் இருக்கும் St Mary Magdalene தேவாலயத்திற்கு அரச குடும்பத்தினர் வந்தனர். அப்போது இளவரசர் ஹரி-மெர்க்கல் ஜோடியும், இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் ஜோடியும் ஒன்றாக சேர்ந்து வந்தனர்.

இரண்டு தம்பதிகளும் நடந்து வந்த போது, ஒருவரை ஒருவர் பேசிக் கொண்டு வந்தனர், குறிப்பாக மெர்க்கல்-கேட் மிடில்டன் சிரித்துக் கொண்டே பேசி வந்தனர்.

சண்டை என்று கூறிய இவர்களா இப்படி? என்று அங்கு அரச குடும்பத்தை பார்ப்பதற்கு காத்திருந்த ஊடகங்களும், மக்களும் வியந்து பார்த்தனர்.

மெர்க்கல் அங்கிருக்கும் மக்கள் சிலரிடம் பேசினார். கர்ப்பிணி என்பதால், அவரை பலரும் வாழ்த்தினர். ஒரு சிலர் கட்டியணைத்து வாழ்த்தினர்.

இந்த கிறிஸ்துமஸ் தினம் மூலம் மெர்க்கல்-கேட் மிடில்டன் பற்றி வந்த செய்தி பொய்யானது என்பது உறுதியாகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...