2019 ஆம் ஆண்டுக்கான நிர்வாண காலண்டரை வெளியிட்ட மாணவர்கள்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள Bristol பல்கலைக்கழக மாணவர்கள் 2019 ஆண்டுக்கான நிர்வாண காலண்டரை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, Bristol Nightline, Womankind மற்றும் CATS Campaign ஆகிய மூன்று தொண்டு நிறுவனங்களுக்காக இந்த நிர்வாண காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொண்டு நிறுவனமானது, பெண்களின் வளர்ச்சிக்கு உதவுதல், கல்விக்கு உதவி மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு காலண்டரை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக, மாணவர்கள் நிர்வாணமாக போஸ் கொடுக்க Bryan Wong என்ற புகைப்படக்கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

தொண்டு நிறுவனங்கள் செய்யும் உதவிகளை பிரதிபலிக்கும் விதமாக மாணவர்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

இந்த காலண்டர் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விலை 7பவுண்ட் ஆகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers