ட்ரோன்களை பறக்கவிட்டு பிரித்தானியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய தம்பதி! வெளியான தகவல்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய விமான நிலையம் அருகே ட்ரோன்களை பறக்கவிட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தம்பதியினரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் கேட்விக் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் பறந்து கொண்டிருந்ததால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் மாற்றிவிடப்பட்டும், ரத்தம் செய்யப்பட்டன.

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக பல்வேறு இடங்களுக்கு செல்லவிருந்த 1,40000-ற்கும் அதிகமான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பிரித்தானிய முழுவதும் பெரும் பரபரப்பை கொந்தளிப்பை நிலையில், வெள்ளிக்கிழமை 10 மணியளவில் கிரால்லி பகுதியை சேர்ந்த பால் கேட் (47) மற்றும் எலைன் கிர்க் (54) என்கிற தம்பதியினரை பொலிஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பால் ஒரு ஜன்னல் பழுதுபார்க்கும் வேலை செய்து வருபவர் என்றும் ட்ரோன் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பால் வேலை செய்யும் இடத்தின் முதலாளி ஜான் ஆல்டர் கூறுகையில், பால் தான் இதனை செய்தார் என்பது என்னால் நம்பவே முடியவில்லை.

பால் மிகவும் நல்ல மனிதன். அன்பான குணம் கொண்டவர். என்னுடன் 17 வருடமாக வேலை செய்துவந்த ஒரு நம்பகமான மனிதர்.

என்னிடம் அடிக்கடி ட்ரோன் பற்றி கேட்டு கற்றுக்கொண்டார். எனக்கு ட்ரோன் இயக்குவதில் 40 வருட அனுபவம் உண்டு. வழக்கமாக 7.45 மணிக்கு வேலைக்கு வரும் பால், சமீப நாட்களாக தாமதமாகவே வேலைக்கு வந்தார்.

எனக்கு அவருடைய மனைவி எலைன் கிர்க்கையும் நன்கு தெரியும். அவருக்கு ட்ரோன் மற்றும் மாதிரி விமானத்தில் எந்தவித நாட்டமும் காட்டியதில்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து சசெக்ஸ் காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் கொலிஸ் கூறுமுகியில், ட்ரோன்கள் இஸ்ரேலிய-வளர்ந்த ட்ரோன் டோம் அமைப்பு மூலம் செயப்படுத்தப்பட்டதால், கட்டுப்படுத்த சிரமம் ஆகியது.

இந்த வகை ட்ரோன்கள், ஆப்ரேட்டரை தொடர்பு கொள்ள முடியாத வகையில் ஒரு விதமான இடைஞ்சலை ஏற்படுத்தும். இதனை ஆப்ரேட்டரின் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான சேவை பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. பாதுகாப்பு சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers