15 குழந்தைகளை பெற்றெடுத்த 52 வயது தாய்: சாதனைக்காக அடுத்து செய்ய உள்ள காரியம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் 15 குழந்தைகளை பெற்றெடுத்த வாடகைத்தாய் 16-வதாக ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என தன்னுடைய ஆசையினை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த கரோல் ஹோர்லோக் என்ற 52 வயதான தாய் இதுவரை குழந்தை இல்லாமல் தவித்த 8 பெற்றோர்களுக்கு குழந்தை பெற்றெடுத்து கொடுத்துள்ளார்.

கரோலிற்கு சொந்தமாக 28 வயதில் ஸ்டெஃபனி மற்றும் 24 வயதில் மேகன் என்ற மகள்களும் உள்ளனர்.

இதை தவிர ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள், மூன்று குழந்தைகள் என 13 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

27 வயதில் தன்னுடைய முதல் குழந்தையை பெற்றெடுத்த கரோல், 15-வது குழந்தையை 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெற்றெடுத்தார். அதன் பின்னர் ஒரு முறை வாடைகைத்தாயாக கர்ப்பம் தரித்திருந்த போது கருமுட்டை பலவீனமாக இருந்ததால் கருச்சிதைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் அவருடைய 53 வது பிறந்தநாள் விரைவில் வரவுள்ளது. அதற்குள் 16 வது குழந்தையை பெற்றெடுத்து, உலகிலேயே வயதான காலத்தில் வாடகைத் தாயாக குழந்தை பெற்ற பெண் என்ற பெருமையை படைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் தன்னுடைய 21 வருட காதலன் பவுலை திருமணம் செய்ய உள்ளார். திருமணத்தின்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பார் எனவும், அதற்கு காதலன் அனுமதி கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக தற்போது வாடகை தாய் விரும்பும் தம்பதியினரை தீவிமாக தேடி வருகிறார். மேலும், இந்த வயதில் கூட தன்னுடைய உடல்நிலை ஒரு குழந்தையை சுமக்கும் அளவிற்கு பலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers