இங்கிலாந்தில் 21,000 விலங்குகள் உள்ள பூங்காவில் பயங்கர தீ விபத்து! தெறித்து ஓடிய பார்வையாளர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தின் சேஷையர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபலமான வனவிலங்குகள் பூங்காவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சேஷையர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபலமான வனவிலங்குகள் பூங்காவில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கு சென்றிருக்கும் பார்வையாளர்கள் வீடியோ வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளனர்.

தற்போது இந்த வீடியோக்கள் இணையம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வீடியோவினை வெளியிட்டவர்களில் ஒருவர், பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளிருக்கும் ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் விலங்குகள் பத்திரமாக வெளியேறி இருப்பார்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், தீயின் வேகத்தை பார்க்கும்போதே எனக்கு பயம் வந்துவிட்டது. இதுவரை எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை என பதிவிட்டுள்ளார்.

செஸ்டர் உயிரியல் பூங்காவில் 21,000-க்கும் அதிகமான வனவிலங்குகள் உள்ளன. தீயின் வேகம் அதிகரித்ததை அடுத்து, தற்போது சில தீயணைப்பு வாகனங்கள் உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers