மகாராணியுடனும், ஹரியுடனும் நெருக்கமாக இல்லாவிட்டால் நீங்கள் அவ்வளவுதான்: மேகனை எச்சரிக்கும் டயானாவின் நண்பர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஹரியுடனும் அவரது பாட்டியுடனும் நெருக்கமாக இல்லாவிட்டால் உங்களுக்கு பிரச்சினைதான் என்று மேகனை எச்சரித்துள்ளார் மறைந்த இளவரசி டயானாவின் நண்பரும் நீண்ட நாள் பட்லருமான Paul Burrell.

Sandringham எஸ்டேட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ராஜ குடும்பமே ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் இந்த ஆலோசனையை மேகனுக்கு வழங்கியுள்ளார்.

60 வயதான Paul Burrell, இளவரசி டயானா ராஜ குடும்பத்திற்குள் முதல் முறை வந்தபோது, மகாராணியாருடன் நெருக்கமாக இருக்குமாறு தான் ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கிறார்.

Norfolkஇல் தங்கியிருக்கும் நான்கு நாட்களும் ஆண்டின் உச்சகட்ட தீவிரமான காலகட்டம் என்று கூறும் Paul, அப்போது அரண்மனையே முக்கிய பிரமுகர்களாலும் அதை விட பெரிய ஈகோக்களாலும் நிரம்பியிருக்கும் என்கிறார்.

எல்லோரும் மகாராணியின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள், அவரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்வார்கள்.

மகாராணியார் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் அரண்மனையில் சீட்டு விளையாட உட்காரும்போது, தன்னுடன் விளையாட வருமாறு மற்றவர்களுக்கு அழைப்பு விடுப்பார், அதுதான் அவருடன் பேசுவதற்கு சரியான நேரம் என்கிறார் Paul.

அந்த நேரத்தை மேகன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், அப்போது மற்ற ராஜ குடும்பத்தினருடன் உடையலங்காரம், நகைகள் பற்றி பேசிக்கொண்டிருக்காமல், மகாராணியிடம் பேசச் செல்ல வேண்டும் என்கிறார் அவர்.

ஹரியுடனும், மகாராணியாருடனும் நெருக்கமாக இருங்கள் என்று கூறும் Paul, இல்லையென்றால் பிரச்சினைதான், ராஜ குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் உங்களுக்கு தொல்லை தருவார்கள் என்று மேகனை எச்சரிக்கிறார்.

கேட் (கிட்டத்தட்ட) ராஜ குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர், மேகன் அப்படியில்லை, அவரது வழியில் நிறைய பள்ளங்கள் இருக்கும், அவரை சிக்க வைக்க பல பொறிகள் வைக்கப்படும் என்னும் Paul, மகாராணியார் எதையும் செவிமடுத்து கவனித்து கேட்பவர், அதனால் நீங்கள்தான் உங்கள் பயங்களைக் குறித்து அவருக்கு சொல்ல வேண்டும், அப்போது அவர் உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை சொல்லுவார், அவர் சட்டங்களையே உங்களுக்காக மாற்றுவார், ஏனென்றால் வில்லியமுக்காகவும் ஹரிக்காகவும் அதைச் செய்துள்ளார், ஆனால் ஒன்று, அவருக்கு நீங்கள் விடயங்களை தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் Paul.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers