தீவிரமடையும் பிரித்தானிய இளம்பெண் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்: கொலை செய்த ஆபாசப்பட அடிமை சிக்கியது எப்படி?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளம்பெண் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் ஏற்கனவே மன நல பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுத்து வந்தவன் என்பதும், அவன் ஒரு தீவிர ஆபாசப் பட அடிமை என்பதும், அந்த இளம்பெண்ணைக் கொல்வதற்குமுன் இணையத்தில் அது தொடர்பாக தேடியதும் பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கொலை செய்தபின் தனது செல்போன் உட்பட, பல தடயங்களை அவன் அழிக்க முயன்றதும் தடயவியல் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளம்பெண் Viktorija Sokolova (14), தான் நண்பன் என எண்ணிய ஒரு நபராலேயே வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு பின்னர் அவளது சடலமும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது செய்திகளாக வெளிவந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நபரின் பின்னணி மற்றும் அந்த இளம்பெண் தாக்கப்பட்ட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Viktorijaவைக் கொலை செய்த நபர் மன நல பிரச்சினைகள் தொடர்பாக சிகிச்சை பெற்றவன் என்பது தெரிய வந்துள்ளதால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

மன நலம் பாதிக்கப்பட்ட கொலைகாரனிடமிருந்து Viktorijaவைக் காப்பாற்றத் தவறியதற்கு Wolverhampton நகர கவுன்சிலோ West Midlands பொலிசாரோ அல்லது அரசு மருத்துவமனையோ பொறுப்பாகுமா என்ற கோணத்தில் தற்போது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அந்த கொலைகாரன் மிகத் தீவிர மற்றும் வன்முறையுடன் கூடிய ஆபாசப் படங்களுக்கு அடிமை என்பது தெரியவந்துள்ளதோடு, Viktorijaவைக் கொல்வதற்குமுன், எப்படி பாலுறவு கொள்வது, பாலுறவு கொண்டால் அந்தப் பெண்ணுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தெல்லாம் அவன் இணையத்தில் தேடியுள்ளான் என்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த கொலைகாரன் ஈராக்கிய பெற்றோருக்கு ஹாலந்தில் பிறந்துள்ளான். Viktorijaவை அவன் தாக்கிய விதத்தை நீதிபதிமுன் விவரித்த வழக்கறிஞர்கள், அவன் அவளை நிர்வாணமாக்கி, வன்புணர்வு செய்து பின்னர் சுத்தியல் போன்ற ஒரு ஆயுதத்தால் அவளது மண்டையில் 21 முறை ஓங்கி அடித்திருக்கிறான்.

அவன் மண்டையில் அடித்ததில் Viktorijaவின் மூன்று பற்கள் சிதறியிருக்கின்றன, ஆறு பற்கள் ஆட்டம் கண்டிருக்கின்றன.

அவன் அடித்த வேகத்தில் அவளது முதுகெலும்பு இரண்டாக உடைந்திருக்கிறது. அவள் இவ்வளவு இரத்தக்காயங்களுடன் கோரமாக கொல்லப்பட்ட பின்னரும் அவளது சடலத்துடனும் அவன் உறவு கொண்டிருக்கிறான் என்று தெரிவித்தனர்.

அவனது வீட்டிலிருந்து மொபைல் போன்களை கைப்பற்றியுள்ள பொலிசார், அவன் Viktorijaவின் கொலைப் பழியை அவளது பெற்றோர் மீதே திருப்ப முயன்றதால், அவனது மொபைல் போனிலிருந்து அவனது கைரேகையை எடுத்து, அதை வைத்தே அவனை சிக்க வைத்துள்ளனர்.

அத்துடன் தடயவியல் நிபுணர்கள், அந்த கொலைகாரன் கொலை செய்தபின் Viktorijaவுடன் தனக்கு தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களை மொபைலிலிருந்து அழிக்க முயலும் காட்சிகள் பதிவாகியுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் அவனது முகம் தெரியாததால் அவனது கைரேகையை பயன்படுத்தி அவனை சிக்கவைத்துள்ளனர் பொலிசார்.

இவ்வளவு கோரச் செயல்கள் புரிந்துள்ளதால், ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பது உறுதியான நிலையில், அந்த நபர் பிப்ரவரி மாதம் 22ஆம் திகதி அடுத்தகட்ட விசாரணைவரையில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers