பாம்பு தோல்களை சட்டவிரோதமாக கடத்திய பிரித்தானிய இளம்பெண்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய மில்லியனரின் மகள் ஒருவர் மலைப்பாம்பின் தோலை சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

பிரித்தானியரான ஸ்டெபானி ஸ்கோலரோ என்பவருக்கு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் 81,000 பேர் ரசிகர்களாக உள்ளனர்.

இவரது தந்தை பிரித்தானியாவில் உள்ள செல்வந்தர்களில் ஒருவர். தற்போது ஸ்டெபானி தமது செயலால் பல ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

இவர் சட்டவிரோதமாக மலைப்பாம்பின் தோலை கடத்தியதாகவும், லண்டனில் உள்ள பல கடைகளுக்கும் பாம்பின் தோலை விற்பனை செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட இணையதளத்தில் பாம்பின் தோல் விளம்பரப்படுத்தியதாகவும் இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பாம்பின் தோலை பயன்படுத்தி கைப்பைகள், பேஸ்பால் தொப்பிகள் உள்ளிட்ட பொருட்களை உருவாக்குகின்றனர்.

ஜேர்மனியில் இவர் தொடர்பான சரக்கு ஒன்று சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாம்பின் தோல்களை இவர் இந்தோனேசியாவில் இருந்து கடத்தி வந்துள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மலைப்பாம்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய இனத்தில் இருப்பதால் அவைகளை கொல்வது சட்டவிரோதமாககும்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் இவர் தொடர்பான வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு வருகின்றது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers