பொதுமேடையில் மெர்க்கல் இப்படி செய்யலாமா? வலுக்கும் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேகன் மெர்க்கல் பொதுமேடையில் வைத்து அடிக்கடி தமது வயிறை தடவிக்கொண்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் குறித்த சம்பவத்தை ஆதரித்துள்ள நிபுணர்கள், அப்படி தொடர்ந்து செய்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விழாவில் கருமை நிற ஆடையில் பாரவையாளர்களை அசத்திய மேகன் மெர்க்கல்,

தமது திருமண ஆடையை வடிவமைத்த Clare Waight Keller என்பவருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளார்.

இந்த நிகழ்விலேயே மெர்க்கல், தமது வயிறை அடிக்கடி தடவியபடி நின்றுள்ளார். இது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும்,

கர்ப்பிணி என்றால் அனைத்து பெண்களுமே இப்படியா நடந்து கொள்கிறார்கள் என சமூக வலைதளத்தில் கொந்தளித்துள்ளனர்.

ஆனால் மெர்க்கலின் இந்த நடவடிக்கைக்கு நிபுணர்கள் ஆதரவளித்துள்ளனர். மெர்க்கலின் அந்த செய்கை, தமது குழந்தைக்கு ஒரு அரணாக தாம் இருப்பதை உணர்த்துவதாகும் எனவும்,

அடிக்கடி வயிற்றை தடவுவது, குழந்தைக்கு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கர்ப்பிணி தாயார் தமது வயிற்றின் மீது ஒவ்வொருமுறை கை வைக்கும் போதும் குழந்தை அதற்கு பதிலளிக்கும் எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...