தாயின் போக்கு பிடிக்கவில்லை..18 முறை கத்தியால் குத்தி கொலை செய்தது எதற்காக? 25 வயது மகளின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனது 53 வயது தாயை 18 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மகளுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Staffordshire நகரில் தனது தாயுடன் வசித்து வந்த Charlene Sargeant என்ற 25 வயது பெண் தனது 53 வயது தாயை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது கொலைவழக்குபதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், ஆரம்பத்தில் தனது தாய், அவரது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு இறந்துவிட்டதாக பொய் கூறியுள்ளார்.

ஆனால், சாட்சியங்கள் இவருக்கு எதிரானதையடுத்து, தனது தாயை கொலை செய்ததை வாக்குமூலமாக அளித்துள்ளார். அதில், எனது தாய் ஒரு பேய் போன்று நடந்துகொண்டார். அவர் என்னை கொடுமைப்படுத்தினார்.

அவரின் போக்கு எனக்கு பிடிக்காமல் போனது, ஒரு கட்டத்தில் அவரின் கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபத்தில் உச்சத்திற்கு சென்று சமையலறை கத்தியை எடுத்து எனது தாயை 18 முறை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து, இவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...