பிரித்தானிய மகாராணியை மீறிய மெர்க்கல்: சர்ச்சையால் இப்படி செய்கிறாரா?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல், யாரும் எதிர்பாராத நிலையில் பிரித்தானிய பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சிகொடுத்துள்ளார்.

கருப்பு நிற ஆடையில் ஜொலித்த மெர்க்கல், தனது திருமண ஆடையை வடிவமைத்த வடிமைப்பாளருக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதினை மேடையில் வழங்கினார்.

மேகன் மெர்க்கல் எது செய்தாலும் அது தவறாக பார்க்கப்படுகின்ற நிலையில், நேற்று இவர் தனது ஆடைக்கு ஏற்றவாறு கருப்பு நிறத்தில் நெயில்பாலிஷ் அணிந்திருந்துள்ளார்.

பிரித்தானிய மகாராணியின் அறிவுறுத்தல்படி, அரசகுடும்பத்தினர் பல வண்ணங்களில் நெயில்பாலிஷ் பயன்படுத்தக்கூடாது.

திருமணம் ஆன நாள் முதல், மெர்க்கல் பல வண்ணங்களில் நெயில் பாலிஷ் அணிந்தது கிடையாது. இந்நிலையில், நேற்று இவர் அணிந்திருந்த நெயில் பாலிஷால் மகாராணியின் கட்டளையை மீறிவிட்டதாக கூறப்படுகிறது.

அரச குடும்பத்தில் தனக்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக இப்படி மெர்க்கல் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...