விஜய் மல்லையாவை நாடு கடத்த பல மாதங்கள் ஆகலாம்: லண்டன் சட்ட நிறுவனம்

Report Print Kabilan in பிரித்தானியா

இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம் என லண்டனில் உள்ள ஜைவாலா என்ற சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சாரோஷ் ஜைவாலா தெரிவித்துள்ளார்.

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, பிரித்தானியாவுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு அனுமதி அளித்து லண்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

ஆனால், ஒருவேளை இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்தால், வழக்கு விசாரணை மேலும் சில மாதங்கள் நீடிக்கும் என்றும், அதனால் இந்தியாவுக்கு அவர் நாடு கடத்தப்படுவதற்கு பல மாதங்கள் வரை ஆகலாம் என லண்டனில் உள்ள சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சாரோஷ் ஜைவாலா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

எனினும், அதுவரை அவரை கைது செய்ய முடியாது. அவர் தொடர்ந்து ஜாமீனிலேயே இருப்பார். உயர்நீதிமன்றம் உத்தரவு விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தாலும் கூட அவரால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.

அப்போது இந்த வழக்கு விசாரணை மேலும் 6 மாதங்கள் வரை நீடிக்கும். எனவே விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம்’ என தெரிவித்துள்ளார்.

AP/PTI

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers