பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, பிரித்தானியாவுக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு அனுமதி அளித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா மீது வழக்குகள் தொடரப்பட்டன

இதையடுத்து கடந்த 2016-ல் மல்லையா பிரித்தானியாவின் லண்டனுக்கு தப்பி சென்றார்.

அவரை நாடு கடத்தக் கோரி பிரித்தானிய அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி, மல்லையாவுக்கு எதிராக லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசு வழக்கு தொடர்ந்தது.

கடந்தாண்டு ஏப்ரலில், மல்லையாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. டிசம்பரில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஓராண்டாக நடந்து வந்த இந்த வழக்கில், லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்மா ஆர்பத்னாட், நேற்று தீர்ப்பு அளித்தார்

அவர் கூறுகையில், வழக்கை முழுமையாக விசாரித்ததில், மல்லையா மீது பொய்யான எந்தக் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின்படி, இந்த வழக்கில் பதில் சொல்லியாக வேண்டிய நிலையில், அவர் உள்ளார். அதனால், அவரை நாடு கடத்த உத்தரவிடப்படுகிறது.

மல்லையா அடைக்கப்பட உள்ள மும்பை, ஆர்தர் சாலை சிறையில் பாதுகாப்பு இல்லை என கூறுவதை ஏற்க முடியாது. தேவைப்பட்டால், அவரது நோய்களுக்கு தனிப்பட்ட முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்