பிரித்தானியா இளவரசி மெர்க்கலின் மற்றொரு முகம்! இதுவரை வெளிவராத உண்மை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசி மெர்க்கல் ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சி நடிகை என்று அனைவருக்கு தெரியும் ஆனால் இதைத் தவிர பல விஷயங்களை அவர் தெரிந்து வைத்துள்ளார் என்பது அவருடைய சிவியை பார்த்த பின்பு தான் தெரியவருகிறது.

பிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மெர்க்கல் தற்போது கர்ப்பமாக இருக்கிறார், இதற்கிடையில் ஹரி-மெர்க்கல் தம்பதி அரண்மனையை விட்டு வெளியேறி வேறொரு வீட்டில் குடிபெயர்கின்றனர்.

இந்த தகவல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இளவரசி மெர்க்கல் திருமணம் செய்வதற்கு முன் பயன்படுத்திய CV-யை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில் இருக்கும் தகவல்களை பார்த்தால், மெர்க்கலுக்கு இவ்வளவு தெரியுமா என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

ஆம் அதில், தன்னுடைய உயரம் 5.6, எடை 51 கிலோ மற்றும் முடி கண் போன்றவைகள் பற்றிய விடயம் உள்ளது.

அதன் பின் அனைவருக்கும் தெரிந்த தொலைக்காட்சி தொடர்களில் நடித்தது போன்றவையும் இருந்தது.

அதன் பின் special skills-ல் பல்லட், ஜாஸ் மற்றும் டேப் நடனம் தெரியும் எனவும் அதுமட்டுமின்றி ஸ்பெனிஷ் சரளமாக பேசத் தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்த நிலையில், அப்படியே அடுத்து பார்த்த போது கிக்பாக்சிங் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவரசி மெர்க்கலுக்கு கிக் பாக்சிங் தெரியும் என்பதை அனைவரும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இப்படி பார்க்க சாதுவாக இருக்கும் மெர்க்கலுக்கு கிக் பாக்சிங் தெரியும் என்றால் நம்பவே முடியவில்லை என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers