குடும்பத்தை பிரித்தது வில்லியம் தான்: அண்ணன் மீது குற்றம் சுமத்தும் ஹரி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியா அரச குடும்பத்தில் பிளவு ஏற்படுவதற்கு காரணம் இளவரசர் வில்லியம் தான் என ஹரி குற்றம் சுமத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேறுவதற்கு ஹரி - மெர்க்கல் தம்பதி வெளியேறுவதற்கு மனைவிகளுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கல்களே காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு மாறாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.

இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி இடையே நீண்ட நாட்களாகவே உள்விவகாரம் இருந்ததாகவும், அது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நடிகை மெர்க்கலை, ஹரி தன்னுடைய சகோதரனிடம் முதன்முறையாக அறிமுகப்படுத்த போது, வில்லியம் சரியான மரியாதையை கொடுக்காமல் இருந்ததாகவும், அதனை தவிர்க்கு முயன்றதாகவும் தெரிகிறது.

மேலும், மெர்க்கல் பற்றிய பின்னணியும், அவளை பற்றிய உண்மையான எண்ணங்கள் பற்றி நமக்கு தெரியாது என ஹரிக்கு வில்லியம் அறிவுரை வழங்கியதாகவும் அரண்மனை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹரி மெர்க்கலை திருமணம் செய்வதற்கு ஒட்டுமொத்த அரச குடும்பமும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் அனைவரையும் சம்மதிக்க வைத்தாலும், பழைய நினைவுகளை வைத்து பழிவாங்குவதற்காகவே ஹரி - மெர்க்கல் ஜோடியை சேர விடாமல் வில்லியம் தடுத்ததாக தெரிகிறது.

கடந்த 2012ம் ஆண்டு லாஸ் வேகாஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வில்லியமை, ஹரி அரைநிர்வாணத்தில் ரகசியமாக படம்பிடித்தார். இதனால் இருவருக்குள்ளும் கடும் சண்டை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஹரி அடிக்கடி வில்லியமிற்கு முடி இல்லாததை பற்றி குறை கூறி வம்பிழுத்துள்ளார்.

இதுபோன்ற பல சம்பவங்களை மையமாக வைத்தே வில்லியம் தற்போது ஹரியை பழிவாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வில்லியம் அறைக்கு அடுத்த அறையில் இருப்பதற்கு ஹரி - மெர்க்கல் தம்பதி விரும்பவில்லை என ஒரு செய்தி வெளியானது. மறுபுறம் தன்னுடைய தாய் டயானாவை சரிவர கவனிக்க முடியாத காரணத்தால், மனைவியையாவது சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தே அரண்மனையை விட்டு வெளியேறுவதாக மற்றொரு செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் இவை அனைத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹரி, ஆரம்பத்திலிருந்தே மெர்க்கலிடம் இருந்து பிரிக்கும் முனைப்பில் வில்லியம் செயல்பட்டதாகவும், தற்போது பிரிந்து செல்வதற்கு காரணமும் அவர் தான் என குற்றம் சுமத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers