1 வாரத்தில் இருநாடுகளை பரபரப்பாக்கிய பில்லினியர் மகள்.. கொடூரக்கொலை என பொலிஸார் அறிவிப்பு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

நியூசிலாந்திற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய மனைவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் அறிவிப்பு வெளியிட்டுருக்கின்றனர்.

எசெக்ஸ் பகுதியை சேர்ந்த கிரேஸ் மில்லேன்னே என்ற 22 வயது மாணவி, கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட 6 வார சுற்றுலா பயணமாக வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

பெருவில் பயணத்தை முடித்துவிட்டு, 20ம் தேதி முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த மில்லேன்னே கடந்த 1ம் தேதி முதல் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

>மில்லேன்னேவின் பிறந்தநாளான 2ம் தேதியன்று நீண்ட நேரமாக போன் செய்து பார்த்த அவருடைய அம்மா, மகள் போனை எடுக்காததால் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், மில்லேன்னே டிசம்பர் 1, 9.41 மணிக்கு சிட்டி லைஃப் ஹோட்டலில் நுழைந்தார் என புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்தனர்.

கடந்த 1 வாரமாக அவரை தீவிரமாக தேடும் பணியில் நியூசிலாந்து பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இன்ஸ்பெக்டர் ஸ்காட் பியர்ட், மில்லேன்னே காணாமல் போன வழக்கில் இதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கும்பொழுது, துரதிஷ்டவசமாக அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுவிட்டார்.என்பது தெரிகிறது.

அவர் கடைசியாக சிட்டி லைஃப் ஹோட்டலுக்கு செல்வதற்கு முன்பு, பல இடங்களுக்கு ஒரு 26 வயது ஆண் நண்பருடன் சென்றிருக்கிறார். அன்று மாலையும் அவருடைய ஆண் நண்பருடன் தான் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரும் எப்படி பழக்கமானார்கள் என்பது தெரியவில்லை. முதலில் மில்லேன்னே உடலை கண்டுபிடிப்பது தான் எங்களுடைய நோக்கமாக உள்ளது.

தற்போது அந்த நபரை கைது செய்யவில்லை. ஆனால் அவரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் மில்லேன்னேவின் உடலை மீட்டு அவருடைய குடும்பத்தாரிடம் பத்திரமாக ஒப்படைப்போம் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அவருடைய குடும்பத்தாருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மில்லேன்னேவின் தந்தை, கண்ணீர் மல்க தன்னுடைய மகளை கண்டுபிடிக்க உதவி கேட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers