சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்: வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்

Report Print Raju Raju in பிரித்தானியா

சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட பதிவாளர் ஒருவர் 4000-க்கும் மேற்பட்ட தம்பதிகளை திருமணம் மூலம் சேர்த்து வைத்த பணியை செய்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று அது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

பிரித்தானியாவின் Gosberton பகுதியை சேர்ந்தவர் பவுல் டுட்கின். இவர் கடந்த 2006-ல் தனது சொந்த தங்கையான ஹேலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பதிவாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த பவுல் சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார்.

பணியில் இருந்த காலக்கட்டத்தில் 4000 தம்பதிகளை திருமணம் மூலம் இணைத்துள்ளார். இதோடு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பணிகளையும் மக்களுக்கு அதிகளவு செய்துள்ளார்.

தன்னுடயை பணியை மிகவும் விரும்பி செய்தாலும் பவுல் அதிகளவு பொதுவெளியில் யாருடன் பேசமாட்டார்.

இது குறித்து பவுல் கூறுகையில், நான் சொந்தமாக ஒரு கால்பந்து அணியை நடத்தி வருகிறேன்.

ஓவ்வொரு போட்டியும் முடிந்த பின்னர் பரிசளிக்கும் நேரத்தில் நான் அனைவர் முன்னிலையிலும் உரையாற்றுவேன்.

என் பணியை நான் எப்போதும் மன நிறைவுடனே செய்து வருகிறேன்.

என் சொந்த திருமணம் குறித்து கேட்கிறீர்கள். ஆம், நான் எனது சகோதரியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன்.

இதை கேட்டால் உங்களுக்கு விசித்தரமாகவும், சிரிப்பாகவும் தோன்றலாம், ஆனால் அது தான் உண்மை, எனக்கு 60 வயதாகிறது, இந்த ஓய்வு என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சராசரி திருப்பமாகவே கருதுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers