பிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் வெளியிட்ட புகைப்படம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

வட மேற்கு இங்கிலாந்தில் குடியிருக்கும் தம்பதி ஒன்று தங்களது 21-வது குழந்தையின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் என அறியப்படும் நோயல் மற்றும் சூ ராட்போர்ட் தம்பதிகளே தங்களின் 21-வது குழந்தையின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டவர்கள்.

நவம்பர் மாதம் பிறந்த Bonnie Raye என்ற குழந்தையுடன் நோயல் மற்றும் சூ ராட்போர்ட் தம்பதிகளுக்கு 21 பிள்ளைகள் உள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், அதற்கான தயாரித்தலில் மொத்த குடும்பமும் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

43 வயதான சூ ராட்போர்ட் தமது 21-வது பிரசவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், வெறும் 12 நிமிடங்களில் பிள்ளை பெற்றெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் அனைவருக்கும் பரிசுகள் வாங்க வேண்டும் என்பதால் சுமார் 5,000 பவுண்டுகள் தேவைப்படும் என்றார் அவர்.

மட்டுமின்றி கிறிஸ்துமஸ் உணவு மட்டும் சுமார் 30 பேருக்கு சமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

16 பேர் ஒன்றாக இணைந்து சாப்பிடும் அளவுக்கு தங்களிடம் உணவு மேஜை ஒன்று இருப்பதாக கூறும் சூ, எஞ்சியவர்களுக்காக மேஜை ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

பொதுவாக வாரம் ஒன்றிற்கு மொத்த குடும்பத்திற்கும் உணவுக்காக மட்டும் 300 பவுண்டுகள் செலவாகும் என கூறும் சூ, பண்டிகை காலம் என்பதால் சற்று அதிகமாகலாம் என்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்