இளம் கைதியுடன் சிறையில் நெருக்கம்: வசமாக சிக்கிய பெண் பொலிஸ்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம் கைதியின் காதல் வலையில் விழுந்த பெண் பொலிசாருக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள சிறையில் காவலராக பனியராக பணியாற்றி வந்த ஸ்டேசி சதர்லாண்ட் (27), தற்போது 8 மாத சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

ஒரு குழந்தைக்கு தாயான ஸ்டேசி, தன்னுடைய முதல் கணவனை விவாகரத்து செய்த பின்னர், பொலிஸ் நிலையத்தில் உள்ள வயதான ஒரு உயர் அதிகாரியுடன் காதலில் இருந்துள்ளார்.

பின்னர் அவரிடம் இருந்து பிரிந்ததும், இளம் கைதியின் காதல் வலையில் விழுந்திருக்கிறார். 20 வயதான லொன் ஷூட்டர் என்ற அந்த கைதி, கடத்தல் வழக்கில் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறான்.

ஒருமுறை ஸ்டேசியின் கைப்பையை ஆராய்ந்த சக காவல் அதிகாரி, அதனுள் இருந்த காதல் கடிதத்தை கைப்பற்றி மேலதிகாரியிடம் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்டேசியின் வீட்டில் இருந்து அதிகமான காதல் கடிதங்கள் சிக்கியுள்ளன.

அதில், ஆபாசமான வார்த்தைகளும், இருவரும் நெருக்கமாக இருந்தது பற்றிய வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தது. "நீங்கள் கோபப்பட்டால் அழகாக இருக்கிறீர்கள்" என கூறியே அந்த கைதி ஸ்டேசியை மயக்கியிருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டேசியின் வழக்கறிஞர் பேசுகையில், முதல் கணவரும், காதலனும் பிரிந்த பின்னர், ஒரு ஆறுதலுக்காக ஸ்டேசி ஏங்கி கொண்டிருந்தாள். அந்த ஆறுதல் ஷூட்டரிடம் இருந்து கிடைத்ததால், அவனை காதலிக்க ஆரம்பித்தாள்.

இதில் என்ன தவறு இருக்கிறது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதற்கான எந்த ஒரு தெளிவான ஆதாரமும் கிடையாது என வாதிட்டார்.

ஆனால் வழக்கு விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, சிறையில் இருந்த ஒரு குற்றவாளியுடன் கிடங்கு பகுதியில் ஸ்டேசி நெருக்கமாக இருந்தார் என கூறி, 18 மாதம் பணியிடை நீக்கமும், 8 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers