லண்டனில் பேஸ்புக் நண்பனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய இளம் பெண்: நேரில் சென்ற போது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் போலி பேஸ் புக் ஐடியை வைத்து இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Muirkirk பகுதியைச் சேர்ந்தவர் Rhys Miller-Offiong(24). இவர் பேஸ்புக் மற்றும் Plenty of Fish-ல் தன்னுடைய உண்மையான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யாமல், நன்கு வெள்ளையாக பார்க்க அழகாக இருக்கும் நபரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, பெண்களுடன் பேசி வந்துள்ளார்.

பேஸ்புக் பெண்களும் இது தான் அவர் என்று நம்பி தொடர்ந்து பேசியுள்ளனர். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவர் இவரிடம் இப்படி பேசிக் கொண்டிருந்த போது, நிர்வாணமாக செல்பி எடுத்து அனுப்பும் படி வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அந்த பெண் புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் பின் இருவரும் சந்திக்க முடிவு செய்த போது அந்த இளம் பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் பேஸ்புக்கில் இருந்த நபருக்கும், தற்போது இருக்கும் நபருக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறி பேசாமல் சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞன் உன்னுடைய புகைப்படங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

இதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Catford பகுதியில் வைத்து அந்த பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின் அந்த பெண் இது குறித்து பொலிசாரிடம் புகார் தெரிவிக்க அந்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் ஏற்கனவே இது போன்று இரண்டு பெண்களின் நிர்வாணபுகைப்படங்களை வைத்து மிரட்டியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்த Woolwich Crown நீதிமன்றம் நேற்று குறித்த இளைஞனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers