பிரித்தானியாவை அதிரவைத்த கொலைகாரன்.. இளவரசியின் முன் கத்தியுடன் நின்ற அதிர்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் தன் தாயின் காதலன் உட்பட மூன்று பேரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளி, இளவரசியும் ராணியின் இரண்டாவது மகளுமான அன்னே முன்பு கத்தியுடன் நிற்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த ஜான் மெக்லிண்டன் என்ற குற்றவாளி கடந்த 2004-ம் ஆண்டு தன்னுடைய தாய் எடித் மற்றும் அவரது நண்பர் ஜேமி கிரே ஆகியோருடன் சேர்ந்து மூன்று பேரை கொடூரமாக கொலை செய்தார்.

அப்பொழுது ஜானுக்கு வெறும் 17 வயதும், அவனுடைய நண்பனுக்கு 16 வயதும் நடந்து கொண்டிருந்தது.

தன்னுடைய தாயின் காதலன் டேவிட் கில்லெஸ்பி (42) மற்றும் அவரது நண்பர்கள் இயன் மிட்செல் (67), டோனி கோயில் (71) ஆகியோரை மிட்செல் வீட்டில் வைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்தனர்.

கொலை செய்யப்பட்டிருந்த வீடு முழுவதும் ரத்தம் ஆறாக தேங்கி நின்றது. வீட்டிலிருந்து ஒரு கோடாரி, கத்திகள், ஒரு சுத்தியல், ஒரு பேஸ்பால் பேட், கோல்ஃப் கிளப், உலோகப் பொருட்கள், மரக்கட்டைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தாக்க ஒரு பெல்ட் உள்ளிட்ட ஆயுதங்களைப் பொலிஸார் கைப்பற்றினர்.

பிரித்தானிய முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகள் ஜான் மற்றும் அவனுடைய நண்பன் ஜேமிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும், தாய் எடித்திற்கு 13 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறையிலிருந்து வெளிவந்த குற்றவாளி ஜான், சமீபத்தில் நடைபெற்ற அரச நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்துள்ளான்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிரித்தானிய ராணியின் இரண்டாவது மகளும், இளவரசியான அன்னேவை சக காவலர்களுடன் சந்தித்தான்.

குற்றவாளி பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் பலரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள பிரபல நடிகர் ஒருவர், அவன் மிகவும் கூர்மையான ஆயுதத்துடன் இளவரசியின் அருகில் நின்று கொண்டிருந்தான். அவனுடைய முந்தைய காலம் பற்றி கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குற்றவாளியை அனுமதித்த பொலிஸார் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers