விஸ்வரூபம் எடுத்த அரச குடும்ப பிரச்சனை: இளவரசருடன் தனது மகளின் உறவு குறித்து பேச மறுத்த கேட்டின் தாய்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

அரச குடும்பத்து பிரச்சனை பிரித்தானிய மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல் முறையாக இளவரசி கேட் மிடில்டனின் அம்மா Carole Middleton பேட்டியளித்துள்ளார்.

அரச குடும்பத்து மருமகள்களான கேட் மற்றும் மெர்க்கலுக்கு இடையேயான உறவுமுறை சீராக இல்லை என்றும் இதனால் அரசகுடும்பத்தில் பிரச்சனை நிலவி வந்தது.

குடும்பத்துக்குள் இருந்து வந்த பிரச்சனை தற்போது பெரிதாக விஸ்வரூபம் எடுத்து அனைத்து ஊடகங்களிலும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தனது மகள் அரசகுடும்பத்து மருமகள் ஆகிய நாள்முதல் மிகவும் மௌனமாகவும், ஊடகங்களின் வெளிச்சம் தன் மீது படாதபடி வாழ்ந்து வந்த கரோல் மிடில்டன் தற்போது தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

தனது மகளின் வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இவர் வசித்து வருகிறார். தனது பேரக்குழந்தைகளுக்கு வீட்டில் கிறிஸ்துமஸ் மரங்களை வைப்பது மிகவும் பிடிக்கும் என்பதால், அனைத்து அறைகளிலும் அதனை தயார் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.

எனது பேரக்குழந்தைகளை அடிக்கடி சென்று சந்தித்து வருவேன், மேலும் அவர்களுடன் சுற்றுலா செல்வேன்.

எனது மகள் அரசகுடும்பத்து மருமகளாகிவிட்டாலும் நான் ஒரு சாதாரண பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன். ஊடகங்கள் என்னை புகைப்படம் எடுப்பதையும், என்னை பற்றி எழுதுவதையும் நான் ஒரு போதும் படிப்பதில்லை.

அதனை முற்றிலுமாக நான் தவிர்த்துவிடுவேன், தற்போது மக்கள் மத்தியில் நான் எப்படி பிரதிபலிக்கப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு தெரியாது. அதனை அறிந்துகொள்ளவும் நான் விரும்பவவில்லை என கூறியுள்ளார்.

எனது பணியில் நான் கவனமாக இருக்கிறேன் மற்றும் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் என்பதால் பேரக்குழந்தைகளுடன் பயணம் செய்ய விரும்புவேன்.

மேலும், இளவரசர் வில்லியம் மற்றும் எனது மகளுக்கும் இடையோன உறவுமுறையை பற்றி நான் பேசவிரும்பவில்லை. அது அவர்களின் வாழ்க்கை, அதில் நான் தலையிடுவது நன்றாக இருக்காது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers