கர்ப்பிணியாக இருக்கும் எனது மகளை அரச குடும்பம் இப்படி செய்வது வேதனையளிக்கிறது: மெர்க்கலின் தந்தை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

கர்ப்பிணியாக இருக்கும் எனது மகள் மெர்க்கலை எதிர்மறை விமர்சனங்களால் காயப்படுத்துவது எனக்கு வேதனை அளிக்கிறது என தந்தை தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

நடிகையாக இருந்து அரச குடும்பத்து மருமகளாகிய நாள் முதல் மேகன் மெர்க்கல் மீது எதிர்மறை விமர்சனங்கள் இருந்து வருகின்ற நிலையில், தற்போது அந்த விமர்சனங்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

மெர்க்கலை ஒரு அரச குடும்பத்து உறுப்பினராக ஏற்றுக்கொள்வதில் ஏற்படும் முரண்பாடு, முதல் மருமகன் கேட் மிடில்டனுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு என தற்போது மெர்க்கலின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஊடகங்களில் மெர்க்கல் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் எழுந்து வருகின்ற விலையில், மெக்ஸிகோவில் வசித்து வரும் மெர்க்கலின் தந்தை தாமஸ் இதுகுறித்து கூறியதாவது, எனது மகள் அரச குடும்பத்து மருமகளாகிய நாள் முதல் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி வந்தாலும், தற்போது கர்ப்பிணியாக இருக்கும் எனது மகளுக்கு அழுத்தம் கொடுப்பது வேதனையளிக்கிறது.

ஒரு தந்தையாக அவளை இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கவே நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers