இளவரசர் ஹரியை திருமணம் செய்யும் நாளில் மேகன் செய்த அராஜக செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சமீப காலமாகவே பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுவரும் நிலையில், புதிதாக இன்னொரு மாபெரும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

பரம்பரை பரம்பரையாக பல ராஜ திருமணங்களையும் பத்து ராஜ அடக்கங்களையும் கண்ட விண்ட்சர் அரண்மனையிலுள்ள புனித ஜார்ஜ் சிற்றாலயம் நாற்றம் அடிப்பதாகவும், அதனால் தனது திருமணம் நடக்கும் நாளில் வாசனைக்காக ரூம் ஸ்பிரே அடிக்க வேண்டும் என்றும் மேகன் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருபக்கம் ஹரியின் சகோதரர் வில்லியமின் மனைவி கேட்டுடனான மேகனின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் ஹரியும் மேகனும் அரண்மனையை விட்டு தனிக்குடித்தனம் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதேபோல் திருமணத்தன்று தலையில் எந்த கிரீடத்தை அணிவது என்பதில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், மேகனுக்கு என்ன வேண்டுமோ அது கிடைக்கவேண்டும் என்று ஹரி அரண்மனை ஊழியர்களை சத்தமிட்டதாகவும், பின்னர் மகாராணியார் தலையிட்டு மேகன் விரும்பியதெல்லாம் கிடைக்காது, நான் கொடுப்பதைத்தான் மேகன் அணியவேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

சமீபத்தில் மேகனின் உதவியாளர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்ததும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அரண்மனை ஊழியர் ஒருவர், மேகன் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் மண் வாசனை வீசுவதாகவும், திருமணத்தன்று ஆலயத்தில் வாசனை திரவியங்கள் தெளிக்க வேண்டும் என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், புனித ஜார்ஜ் தேவாலயத்தில் எந்த நடைமுறை என்றாலும் மகாராணியாரைக் கேட்காமல் செய்ய முடியாது.

ஆகவே தேவாலயத்துக்கு பொறுப்பான Lord Chamberlain அலுவலகம் மேகனின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

பழைய கட்டிடத்தில் ஒரு வித வாசம் இருக்கத்தான் செய்யும், அது ராஜ குடும்பத்தாருக்கு பழகிப்போன வாசம் என்று தெரிவித்துள்ள ராஜ குடும்ப ஊழியர்கள், மேகனிடம் மிகவும் மரியாதையாக, அதே நேரத்தில் உறுதியாக, இது மகாராணியாரின் ஆலயம், உங்கள் கோரிக்கை பொருத்தமற்றது என்று கூறிவிட்டனர்.

அந்த கோரிக்கை தங்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியதாக தெரிவிக்கும் அரண்மனை ஊழியர் ஒருவர், உண்மையில் கூறப்போனால், மேகன் செய்த இந்த செயல், இதுவரை அவர் செய்ததிலேயே மிகவும் மோசமான செயல் என்று கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...